யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு சி.வீ.கே கண்டனம்!
யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில்,
ஆகக் குறைந்தது இருபத்தைந்து கோடி பெறுமதியான இந்த சொத்து மோசடியாக அபகரிக்கப்பட்டமை பற்றி மாநகர நிர்வாகத்தின் அலட்சிய போக்கு கண்டிக்க தக்கது
இது இவ்வாறு இருக்கையில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் மாநகரசபை காணிகள் தொடர்பாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது
எனவே மேற்குறிப்பிட்ட விடயத்தை வெகு முக்கியம் வாய்ந்த விடயமாக எடுத்து இந்த குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறித்துவதுடன் அடுத்த நான்கு வாரத்திற்குள் எடுக்கப் பட்ட நடவடிக்கை பற்றிய முன்னேற்றத்தை எமக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விடயம் தொடர்பாக மக்கள் அறிதலுக்காக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து வந்தது போல இந்த கடிதமும் ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது – என்றுள்ளது