;
Athirady Tamil News

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் ரூ. 30,000 அபராதம்

0

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக   6 வழக்குகள் தாக்கல்   செய்யப்பட்டதில் ரூ. 30,000 அபராதத் தொகை சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று  விதித்துள்ளது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு பொதுச் சுகாதார அதிகாரி  பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (6) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட பொது குறித்த அபராதங்கள் சம்மாந்தறை நீதிவான் நீதிமன்றினால்  விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மல்வத்தை பொதுச் சுகாதார அதிகாரி  பிரிவுக்குட்பட்ட பகுதியில் நுளம்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் மீறப்பட்ட 4 வழக்குகள் பதிவாகியதுடன்  ஒவ்வொரு வழக்கிற்கும் தலா ரூ. 5,000 வீதம் மொத்தம் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது. மல்வத்தை பொதுச் சகாதார அதிகாரி  பிரிவில் இதுவரை 15 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் (தொடர்பில்  உடங்கா பொதுச் சுகாதார அதிகாரி  பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட  ஒரு வழக்கில்  ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் சம்மாந்துறை-01 பொதுச் சுகாதார அதிகாரி  பிரிவில் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறிய 1 வழக்கிற்காக   ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.மொத்தமாகப் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளுக்கும் சேர்த்து ரூ. 30,000  அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களை நடத்துவோர் பின்வரும் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇசெல்லுபடியாகும் மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்இஉணவைக் கையாளும் போது கட்டாயமாக ர்யசை நேவ மற்றும் யுpசழn அணிய வேண்டும்இஉணவு தயாரிக்கும் இடங்களை எப்போதும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்இஉணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் தீவிரமாகப் பின்பற்றப்பட வேண்டும் என  உணவுக் கையாளுபவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேற்படி அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதுடன் உணவு தயாரிப்பு நிலையங்கள் தொடர்ந்து பரிசோதிக்கப்படும் எனவும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் எச்சரித்துள்ளது. பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தவிர இப்பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு முற்றாக இல்லாதொழிக்குமாறு சுகாதாரத் துறையினர் கடுமையாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.