14 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை; மக்களே அவதானம்
நாட்டின் 14 மாவட்டங்களில் அடுத்த சில மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், கேகாலை, இரத்தினபுரி, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா, பதுளை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.