;
Athirady Tamil News

இலங்கையில் பயணிகளுக்காக பறக்கும் மின்சார ட்ரோன்கள்

0

இலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக ட்ரோன் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மின்சார ட்ரோன்கள் கொழும்பு துறைமுக நகரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி இவற்றின் உத்தியோகபூர்வ செயல்விளக்கம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் ட்ரோன்
சீனாவின் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் மின்சாரத்தில் இயங்கும் ட்ரோன்கள் செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கக்கூடிய விமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய முதலாவது பறக்கும் ட்ரோன் ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதோடு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை, சரக்குப் போக்குவரத்து, அவசர மருத்துவப் போக்குவரத்து மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கான விநியோக நடவடிக்கைகளில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் இலங்கையின் சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.