;
Athirady Tamil News

முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்: விரைவில் 3 நாட்டு தலைவர்கள் சந்திப்பு

0

சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இடையே சாத்தியமான சந்திப்பு குறித்து விவாதித்து வருவதை சீனா முதன்முறையாக உறுதி செய்துள்ளது.

சீனா, ரஷியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வர்த்தகம், வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதேபோல் டிரம்ப- ரஷிய அதிபர் புதின் அடிக்கடி தொலை பேசியில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டிரம்ப்-ஜின்பிங்-புதின் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும் போது, ஜின்பிங், டிரம்ப், புதின் ஆகியோருக்கு இடையேயான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு குறித்து சீனா விவாதித்து வருகிறது. இந்த சந்திப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சீனா தொடர்பில் உள்ளது என்றார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப் பின் உச்சி மாநாடு இந்த மாதம் சீனாவின் ஷென் சென் நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக 3 தலைவர்களின் சந்திப்பு நடைபெறும்.

3 வல்லரசு நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக சந்தித்து பேசினால் அது ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.