;
Athirady Tamil News

22 வயது இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

0

மாதம்பே – குளியாப்பிட்டிய வீதியின் கஹதெனியகம சந்தைக்கு அருகில், மாதம்பே நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்கு பிரவேசித்த கார் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காரின் சாரதியும் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் துனுகதெனிய, வலிபன்னகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.

இது குறித்து தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.