;
Athirady Tamil News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

0
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று (08.11.2026) காலை 08.30 மணிக்கு யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
இந் நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  சுனில் குமார கமகே, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா. ஜெயகரன், யாழ்ப்பாண சிரேஷ்ட விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன், மாவட்டச் செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்  கி. மாலினி, மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  வி. மகிந்தினி, கலாசார உத்தியோகத்தர்கள், ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

தீபாவளித் திருநாளின் ஆன்மீகச் சிறப்பையும், சமூக நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.