;
Athirady Tamil News

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 2 பேர் பலி; 50 இற்கு மேற்பட்டோர் காயம்

0

அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இன்ரு காலை இடம்பெற்ற கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 2 பஸ்களும் தனியார் பஸ் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், பின்னர் தனியார் பேருந்து ஒன்றும் குறித்த பேருந்துகளில் ஒன்றை மோதியதில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.