;
Athirady Tamil News

தீப்பிடித்து எரிந்த வீடு ; இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

0

கண்டி, குண்டசாலை புதிய நகரில் வீடு ஒன்று தீப்பிடித்ததால் வீட்டின் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (09) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
தீ பரவிய வேளையில் குறித்த வீட்டில் தங்கியிருந்த 34 வயதுடைய பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டின் உரிமையாளர் வெளிநாடொன்றில் வசித்துவருவதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.