;
Athirady Tamil News

ஒருநாள் மற்றும் பொதுச் சேவைகளை விரிவாக்கும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்

0

பொதுமக்களின் வசதிக்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தனது ஒருநாள் மற்றும் பொதுச் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் ஒருநாள் சேவைகளுக்கு முன்பதிவு கட்டாயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வாகனப் பதிவு, வாகன உரிமை மாற்றம், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள் மற்றும் தொழிநுட்ப பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட அனைத்து ஒருநாள் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே நேரம் ஒதுக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அலுவலகங்களைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம்

  • கொழும்பு: 011 2 117 116
  • கம்பஹா: 033 2 117 116
  • குருநாகல்: 037 2 117 116
  • ஹம்பாந்தோட்டை: 047 2 117 116
  • அனுராதபுரம்: 025 2 117 116
  • யாழ்ப்பாணம்: 021 2 117 116

எனினும், குறித்த மாவட்ட அலுவலகங்கள் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுகளை மட்டுமே கையாளும் எனவும், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (https://dmtappointments.dmt.gov.lk)

பொதுச் சேவைகளைப் பெறுவதற்கு முன்கூட்டிய நேர ஒதுக்கீடு அவசியமில்லை எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டியிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு மேலதிகமாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள அலுவலகங்களிலும் வாகன உரிமை மாற்றத்திற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கம் பொதுமக்கள் இலகுவாகவும் விரைவாகவும் திணைக்களச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.