;
Athirady Tamil News

வெள்ளை மாளிகையில் நண்பருக்கு புதிய பதவி வழங்கிய டிரம்ப்; விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது நண்பரும், யு.எப்.சி. நிறுவனத் தின் உரிமையாளருமான டானா ஒயிட் என்பவருக்கு வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் பதவியை வழங்கி உள்ளார். வெள்ளை மாளிகையில் தனது நண்பருக்கு புதிய பதவியை டிரம்ப் வழங்கி உள் ளார். இதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிரம்பின் நண்பர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது நண்பரும், யு.எப்.சி. நிறுவனத் தின் உரிமையாளருமான டானா ஒயிட் என்பவருக்கு வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் பதவியை வழங்கி உள்ளார். இதில் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி புளோரிடா அருகே மேற்கு பாம் கடற்கரையில் டானா ஒயிட் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-நான் இதுபற்றி நாளை (இன்று) வெள்ளை மாளிகைக்கு சென்று டிரம்பை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன். புளோரிடாவில் உள்ள கோல்ப் விளையாட்டு மைதா னத்தில் நான் இருந்தபோது, டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத் தில் ஒரு பதிவை வெளியிட்டு இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

நிராகரித்து விட்டேன்

அதில் ‘டானா ஒயிட் ஒரு சிறந்த மனிதர், வன்முறைக்கு எதிராக போராடுபவர், போர்வீரன்’ என்று குறிப்பிட்டு, அவரை குடியரசு கட்சியின் முதன்மை பேச்சாளராக, அதாவது வெள்ளை மாளிகை ஊடக செயலாளராக அறிவிக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். தற்போது உலக அளவில் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதனால் எனக்கு டிரம்ப் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கலாம். எனக்கு இதுபோல் ஏற்கனவே பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் அவற்றை எல்லாம் நிராகரித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.