;
Athirady Tamil News

ஒரு வருடத்தில் 1.23 லட்சம் இந்தியர்கள் இங்கிலாந்தில் குடியேற்றம்!

0

ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரையிலான ஒரு வருடத்தில் 7.38 லட்சம் பேர் இங்கிலாந்துக்கு குடியேறியிருக்கிறார்கள். அவர்களில் இந்தியர்கள் மட்டும் 1.23 லட்சம் பேருடன் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

இந்தியர்களில் 76 ஆயிரம் பேர் படிப்புக்காகவும், 40 ஆயிரம் பேர் வேலைக்காகவும் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர் . அதேநேரம், இந்த வருடம் இங்கிலாந்தில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதிகபட்சமாக, ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரையிலான ஒரு வருடத்தில் 3.7 லட்சமாக இருந்த இந்தியர்களின் குடியேற்ற எண்ணிக்கை தற்போது 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருக்கிறது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அந்தவகையில் அமெரிக்காவில் டிரம்பின் விசா கெடுபிடிகளால் இந்தியர்கள் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.