;
Athirady Tamil News

உலகின் மிகச்சிறிய சைக்கிளை ஓட்டி கின்னஸ் உலக சாதனை படைத்த உடன்பிறப்புகள்!

0

லண்டன்,

உலகின் மிகச்சிறிய பென்னி-பார்த்திங் எனப்படும் முன்பக்கம் பெரிய டயரையும் பின்பக்கம் சிறிய டயரையும் கொண்ட சைக்கிளை ஓட்டி 6 மற்றும் 7 வயது உடன்பிறப்புகள் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

உலகின் மிகச்சிறிய சைக்கிள்- கின்னஸ் சாதனை

பிரிட்டனைச் சேர்ந்த 7 வயது சிறுமி ப்ளோ உட்வர்ட் மற்றும் அவரது 6 வயது சகோதரர் பின் உட்வர்ட் ஆகியோர், உலகின் மிகச்சிறிய சவாரி செய்யக்கூடிய பென்னி-பார்த்திங் சைக்கிளை ஓட்டி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

முதல் முயற்சியிலேயே வெற்றி

லண்டனில் கடந்த ஜூன் 13-ம் தேதி அன்று ‘சிட்டி ஆப் லண்டன் நாக்டூர்ன்’ என்ற சைக்கிள் ஓட்ட நிகழ்வு நடைபெற்றது. அதாவது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் போல்வெல் என்பவரால் வடிவமைக்கப்பட்ட “லிட்டில் பீ” எனும் சிறிய சைக்கிள், வெறும் 62 சென்டிமீட்டர் (2 அடி) உயரமும், 29 சென்டிமீட்டர் முன் சக்கர விட்டமும் கொண்டது. அந்த சைக்கிளில் ஏறிய இருவரும் முதல் முயற்சியிலேயே தடுமாற்றமின்றி 100 மீட்டர் (328 அடி) தூரத்தைக் கடந்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

குடும்பமே சாதனையாளர்கள்

உட்வர்ட் குடும்பத்தினருக்கு பென்னி-பார்த்திங் சைக்கிள் ஓட்டுவது புதிதல்ல. இவர்களின் பெற்றோரும் இத்துறையில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். குறிப்பாக, இவர்களின் தாயார் ஜூலி உட்வர்ட் ஏற்கனவே பெண்களுக்கான அதிவேக 1 கிலோமீட்டர் பென்னி-பார்த்திங் சைக்கிள் ஓட்ட சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நிகழ்வில் 282 சென்டிமீட்டர் உயரமுள்ள “பிக் பெர்த்தா” என்ற உலகின் மிகப்பெரிய பென்னி-பார்த்திங் சைக்கிள் ஓட்டப்பட்ட சாதனையும் நிகழ்த்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.