;
Athirady Tamil News

இன்று காலை நுவரெலியாவில் கோர விபத்து ; 11 பேர் பலி, பலர் படுகாயம்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை வைத்தியசாலையில் சேர்க்க…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் உள்ள இலங்கை, மின்சாரத்திற்கான செலவு-பிரதிநிதித்துவ விலையை…

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 21 வயது இளைஞன் பலி

கொழும்பு பானதுறை வளான பகுதியிலே ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் 21 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த இளைஞன் பானதுற ரயில்வே நிலைய வீதியில் உள்ள S.S Motors நிறுவனத்தில் வேலை செய்த இளைஞர் என தெரியவந்துள்ளது. இவர்…

ஆப்கன் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாக். குற்றச்சாட்டு: தலிபான் அரசு மறுப்பு

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானின்…

அரச ஊழியர்களின் பேரிடர் கடன் தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும்…

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் பரிசீலிக்கத் தயார்: பாகிஸ்தான் அமைச்சர்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பரிசீலிக்கத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செய்தி நிறுவனத்திடம் பேசிய இஷாக் தார், முடிவெடுக்கும் வாய்ப்பு இந்தியாவிடமே…

அரிசி மாபியாவை கட்டுப்படுத்த கூட்டுறவுதுறையை வளர்த்தெடுங்கள்

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும். அதனாலேயே, கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துவதன் ஊடாக அரிசி மாபியாவை எதிர்காலத்திலாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

நல்லூர் ஆலய சூழலுக்கு அருகாமையில் அசைவ உணவகம்

நல்லூர் ஆலய சூழலுக்கு அருகாமையில் அசைவ உணவகம் திறக்கப்பட்டமைக்கு யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இவ்வாறான விடயங்களை நாம் அனுமதிக்காமல் இருக்க வேண்டும் எனவும், புதிதாக மாநகர சபைக்கு…

எங்களுக்கு ஒரே மகன், காலையில் தான் வீடியோ காலில் பேசினான்: உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின்…

காலையில் தான் எங்களுடன் வீடியோ காலில் பேசினான் என்று பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். பெற்றோர் உருக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளம் இந்திய…

பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சியை நெருங்கும் இந்திய போர்க்கப்பல்கள்

இரு நாட்டு எல்லைகளிலும் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய போர்க்கப்பல்கள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை நெருங்கி முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கராச்சி துறைமுகம் இந்திய ஆயுதப் படைகளுக்குள் இருந்து கசிந்த…

வாழ்க்கை தேர்ச்சி குடியுரிமை கல்விப்பாடமும் சமூகமயமாக்கலும்

புதிய தலைமுறை விடியல்களின் கையில் எதிர்காலத்தின் கனவுகள் தவழ்கின்றன. தொழில்நுட்பத்தின் விரல் நுனியில் உலகம் சுருங்கிவிட்ட இந்த யுகத்தில், சமூக உறவுகளின் பாலங்கள் சற்று தளர்ந்திருக்கின்றன. இந்நிலையில், பாடசாலைகள் வெறும் ஏட்டுச்சுரக்காய்…

போர்ப் பதற்றம்: உயரதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்தது ஒடிசா அரசு!

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது நிர்வாகம், பொது குறை தீர்க்கும் துறை, வருவாய் கோட்ட ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட…

பெரமுன கட்சியின் பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன…

ஏழை சிறார்களைக் கொல்லும் எலோன் மஸ்க்… பில் கேட்ஸ் பகீர் குற்றச்சாட்டு

டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் ஏழைக் குழந்தைகளைக் கொன்று வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். மீண்டும் எழும் அபாயம் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் தனது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்குவதாகவும், கேட்ஸ்…

இந்திய உயர்ஸ்தானிகர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று (10) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள…

குருந்தூர்மலையில் சட்டவிரோத காணி பிடித்த பிக்கு அடாவடி; மூவர் கைது

முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். குறித்த பௌத்த…

யாழ்.மக்களுக்கு விசேட அறிவிப்பு; 179 ரூபாவுக்கு ஒரு பக்கெட்

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், உப்பு விநியோகம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ளது. ஆகக் கூடியது 3…

கேள்விக்குறியாகும் பலஸ்தீன் மாணவர்களின் கல்வி

கிழக்கு ஜெருசலேமில் உள்ள 6 ஐநா பாடசாலைகளை இஸ்ரேல் நிரந்தரமாக மூடியதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீன அகதிகளுக்காக ஆறு பாடசாலைகளை நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில்…

இந்திய ராணுவம் தாக்குதல்: கண்ணீா்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. தாஹிா் இக்பால் கண்ணீா்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் இந்திய ராணுவ…

ரஷ்யா – உக்ரைன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் அழைப்பு

அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் ரஷ்யா- உக்ரைன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் நாட்டின்மீது கூடுதல்…

அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும்…

போதைப்பொருளை பயன்படுத்தி பேருந்தை செலுத்திய சாரதி; அச்சத்தில் பயணிகள் !

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தை பாதுகாப்பற்றவகையில் செலுத்தியமை தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து களுத்துறை பகுதியில் வைத்து களுத்துறை தெற்கு பொலிஸாரால் அவர் கைது…

போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

புது தில்லி: போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார். இந்தியா -…

கொழும்பில் இரு இடங்களில் தீ விபத்து

கொழும்பு - வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (10) ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீ விபத்திற்கான…

தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.…

3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” உள்பட 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்து வான்வெளியை முழுவதுமாக பாகிஸ்தான் மூடியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள்…

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு: இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு: இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு படம்: இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளம். புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஏவுதளங்களை வெற்றிகரமாக அழித்துள்ளதாக அறிவித்துள்ள இந்திய ராணுவம் அதுதொடர்பான…

சீனா மீதான வரிவிதிப்பை குறைக்க டிரம்ப் பரிசீலனை

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்துவருகிறாா். கூடுதல் வரி விதிப்புகளால் இரு நாடுகளுக்கும் இடையே…

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் பல உயரமான கட்டிடங்களில் விமானத்…

பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவா் உயிரிழப்பு; ஐவா் காயம்

பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில்…

இலங்கை ஹெலிகொப்டர் விபத்து ; படுகாயமடைந்த இராணுவ வீரர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆறு இராணுவ வீரர்களின்…

யாழில் இனம் தெரியாத கும்பல் அட்டூழியம்; வர்த்தகருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இன்று காலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 6.15 மணியளவில் அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத் திறப்பதற்கு சென்ற வேளை…

அதீத போதையால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் ; யாழில் சம்பவம்

போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று (9) பிற்பகல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டவர் பருத்தித்துறை பொலிஸ்…