;
Athirady Tamil News

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம், அப்பியாசக் கொப்பிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் அப்பியாசக் கொப்பிகள் வழங்கிக் கொண்டாட்டம். (படங்கள், வீடியோ)
########################

லண்டனில் வசிக்கும் செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு மருதானை பிரபல வர்த்தகருமான சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஸ்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரான லண்டனில் வசிக்கும் பாபு அல்லது யோகி என அழைக்கப்படும் திரு.திருமதி.யோகலிங்கம் மீரா அவர்களது செல்வப்புதல்வி செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களின் பிறந்தநாள் வவுனியா ஆச்சிபுரம் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.

வவுனியா ஆச்சிபுரம் அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி இவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அத்துடன் கலந்து கொண்ட அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு கற்றல் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வுகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க திருமதி.பிரியங்கா அவர்கள் உடனடியாக ஒழுங்கமைத்து சிறப்பாக நடத்தி இருந்தார். நிகழ்வில் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் *திருமதி க. நந்தினி, *திருமதி ஆ. கற்பகம், *திரு க. கோகுலன் ஆகியோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் லண்டன் தேனு அவர்கள், புங்குடுதீவு பிரபல வர்த்தகர் சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பலவேறு வாழ்வாதார மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவருக்கும் தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப்பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
03.04 2023

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் அப்பியாசக் கொப்பிகள் வழங்கிக் கொண்டாட்டம். (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.