;
Athirady Tamil News

இந்தியாவில் தீபாவளி வர்த்தகம் எவ்வளவு தெரியுமா?…!!

0

இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன.

தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு உண்டு கொண்டாடுவதுதான். தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன்னதாகவே, இனிப்பு பலகாரங்கள் செய்வதற்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் தயாராகி விடுவார்கள்.

தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கப்படுவதால், விலை குறித்து கவலைப்படாமல் புத்தாடை, பட்டாசுகள் வாங்கிச் செல்வார்கள். இதனால் தீபாவளிக்கு முன்னதாக ஒரு வாரம் எந்த மார்கெட்டை எடுத்துக் கொண்டாலும் கூட்டமாகவே காணப்படும்.

கோப்புப்படம்

குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தீபாவளி பண்டிகை மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளதால், தீபாவளி பண்டிகை கொண்டாட மாநில அரசுகள் அனுமதி அளித்தன.

இதனால் வியாபாரம் ஜோராக நடைபெற்றது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா முழுவதும் 1.25 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளை விட இந்த வருட விற்பனை அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.