;
Athirady Tamil News

புண்ணிய ஸ்தலங்களில் ஆசி பெறும் ஜனாதிபதி…!!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ​நேற்று (08) முற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டு, ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

புண்ணிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அட்டமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய பல்லேகம சிறிநிவாச நாயக்கத் தேரரைச் சந்தித்து அவருடைய நலன் விசாரித்தறிந்தார். ஜய ஸ்ரீ போதியை வழிபடுவதற்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வாகனத் தரிப்பிடத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில், அட்டமஸ்தானாதிபதியுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகில், மஹா சங்கத்தினரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் பெருந்தொகையான மாணவர்கள், ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபாடு செய்ய வருகை தந்திருந்தனர். அவர்களின் அந்தப் பரீட்சை நடவடிக்கைகளுக்கு, ஜனாதிபதி ஆசிர்வாதமளித்தார்.

அங்கு வருகை தந்திருந்த மக்கள், ஜனாதிபதி அவர்களைக் காண்பதற்கும் அவருடன் கலந்துரையாடுவதற்கும் பெரிதும் ஆர்வம் காட்டியதோடு, ஜனாதிபதி அவர்களுக்கு அருகில் சென்று நலன்களைக் கேட்டறிந்து கொண்டார்.

ருவன்வெலி மஹா சேய புண்ணிய ஸ்தலத்துக்கு 7 ஆம் திகதி விஜயம் செய்த ஜனாதிபதி, ருவன்வெலி மஹா சைத்தியராமாதிகாரி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். பல்லேகம ஹேமரத்தன தேரரினால் எழுதப்பட்ட பாடல்கள் அடங்கிய புத்தகமொன்றும் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர், விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, நீர்ப்பாசன அமைச்சினால் புத்தாண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிர்வாதப் பூஜையிலும் கலந்துகொண்டார். நேற்றைய தினம், ருவன்வெலி மஹா சேய விஹாரையில் பெருமளவான மக்கள் கூடியிருந்த நிலையில், அவர்களுடன் ஜனாதிபதி சுமூகமாகக் கலந்துரையாடினார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான சன்ன ஜயசுமன, சிறிபால கம்லத், அநுராத ஜயரத்ன மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும், இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.