;
Athirady Tamil News

இரத்தத்தால் பிரபலமான வேம்பையர் பேஷியல்: எச்ஐவியை பரப்பும் கொடூரம்

0

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ ஸ்பாவில்(Spas New Mexico USA) வேம்பையர் பேஷியல்(Vampire Facial) செய்த மூன்று பெண்கள் எச்ஐவியால்(HIV) பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேம்பையர் பேஷியலானது காஸ்மெட்டிக் முறையில் முகத்தை பொலிவாகவும் சுருக்கம் இல்லாமலும் வைக்க இந்த பேஷியல் உதவுமென அழகு நிபுணர்கள்(Cosmetologists) தெரிவித்துள்ளனர்.

பிரபலமான இந்த வேம்பையர் பேஷியல் அமெரிக்கா போன்ற மேற்கத்தேய நாடுகளில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

வேம்பையர் பேஷியல்
சாதாரண மக்களும் இப்போது இந்த வகை பேஷியலை செய்துகொள்வதுடன் மற்ற ஒப்பனை(Cosmetic) பேஷியல்களைவிட இந்த வேம்பையர் பேஷியல் குறைந்த விலையில் செய்யப்படுகிறது.

இதனால், முகத்தில் பொலிவு மற்றும் சுருக்கமின்மை ஏற்பட்டாலும் முறையற்ற முறையில் இந்த பேஷியல் செய்வது கண்டிப்பாக ஆபத்தை விளைவிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எச்ஐவி
வேம்பையர் பேஷியலுக்காக பேஷியல் பெற விரும்புவோரின் உடலில் இருந்து இரத்தம் எடுக்கப்படுவதுடன் இந்த இரத்தத்தில் இருந்து பிளாஸ்மா(Plasma) தனியாக பிரிக்கப்படும்.

பிரிக்கப்பட்ட பிளாஸ்மாவை ஊசிமூலம் முகத்தில் செலுத்துவதூடாக இந்த வேம்பையர் பேஷியல் செய்முறை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் இந்த பேஷியலை செய்துகொண்ட மூன்று பெண்களுக்கு எச்ஐவி(HIV) உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக அமெரிக்காவின் சிடிசி(நோய் தடுப்பு மையம்) உறுதி செய்துள்ளது.

வெளியிட்ட அறிக்கை
இது தொடர்பாக சிடிசி வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் ஸ்பா ஒன்று செயல்பட்டு வந்த நிலையில் இதில் வேம்பயர் பேஷியல் செய்த பெண் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு மேலும் இரண்டு பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் இரண்டு பேரும் ஒரே ஸ்பாவில் வேம்பயர் பேஷியல் செய்தவர்கள் ஸ்பா பற்றி விசாரித்தபோது அது உரிய அனுமதியின்றி உரிமம்(License) இன்றி இயங்கியது தெரியவந்ததையடுத்து கடந்த 2018 இல் அந்த ஸ்பா மூடப்பட்டது.

தற்போது ஸ்பா உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் வேம்பயர் பேஷியல் மூலம் தான் மூன்று பெண்களுக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த ஸ்பாவில் சிகிச்சை பெற்று கொண்ட மற்றவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிர்ச்சித் தகவல்
அத்தோடு வேம்பையர் பேஷியல் செய்யும்போது பயன்படுத்திய ஊசிமூலம் மூவருக்கும் எச்ஐவி ஏற்பட்டு இருக்கலாமென கூறப்படுவதுடன் மேலும் ஒரு நபருக்கு பயன்படுத்திய அதே ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தி அதன்மூலம் மூவருக்கும் எச்ஐவி ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, குறிப்பிட்ட இந்த ஸ்பாவில் சிகிச்சை பெற்ற 59 பேருக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டு இருக்கும் என்கிற அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது.

மேலும் எச்ஐவி தொற்று உறுதி செய்யபட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக கிடைக்கவில்லையென்பதுடன் இந்த சம்பவத்தினால் அமெரிக்காவில் இருக்கும் அனைத்து ஸ்பாவிற்கும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.