இன்றும் 46 பேர் நாடு கடத்தப்பட்டனர் !!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று (30) காலை நாடுகடத்தப்பட்டனர்.
நாடுகடத்தப்பட்ட 46 பேரும் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
நாடுகடத்தப்பட்டவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களுள் 5 வயதுக்கு குறைந்த இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.