;
Athirady Tamil News

சுவிஸ் பெண்மணிக்கு கிடைத்த பணம்: கூடவே வந்த தொல்லை

0

சுவிட்சர்லாந்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வயதான பெண்ணொருவர், அங்கு ஏற்கனவே யாரோ 1,000 சுவிஸ் ஃப்ராங்குகளை எடுக்காமல் விட்டுச் சென்றுள்ளதைக் கவனித்துள்ளார். கண நேர சபலம், அபராதம் செலுத்தும் நிலைக்கு அவரைத் தள்லிவிட்டது.

ஏடிஎம்மில் கிடைத்த பணம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்திலுள்ள Wallisellen என்னுமிடத்தில், 75 வயதுப் பெண்ணொருவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம்முக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு அவருக்கு முன் பணம் எடுக்கவந்த யாரோ, 1,000 சுவிஸ் ஃப்ராங்குகளை எடுக்காமல் விட்டுச் சென்றுள்ளதைக் கண்ட அவர், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கூடவே வந்த தொல்லை
விடயம் அதிகாரிகளுக்குத் தெரியவரவே, அவர் நீதிமன்றம் செல்ல நேர்ந்துள்ளது. விசாரணைக்குப்பின் அந்தப் பெண் செய்தது திருட்டுக் குற்றம் அல்ல என்று கூறிய நீதிமன்றம், என்றாலும் அவர் செய்தது முறையான செயல் அல்ல என்று கூறி, அவர் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும், கூடவே 400 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், சட்டப்படி, அந்தப்பணம் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து வெளியே வந்துவிட்டதால், அது இனி அந்த வங்கிக்குச் சொந்தமல்ல. அதேபோல, அந்த பணத்துக்குரியவர் அந்த பணத்தை எடுக்கவில்லை. அதை அவர்கள் உரிமை கொண்டாடவும் முன்வரவில்லை. ஆகவே, அது அவர்களுடையதும் அல்ல. என்றாலும், அந்தப் பெண் கண்டெடுத்ததால், அது அவருக்கும் சொந்தமல்ல!

You might also like

Leave A Reply

Your email address will not be published.