;
Athirady Tamil News

பாலத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற அதிபர் பைடன் : அமெரிக்க மக்கள் அதிர்ச்சி

0

தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அதிபர் ஜோ பைடன் கூறியது அமெரிக்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முக்கிய விடயங்களை அண்மையில் அவர் கலந்துகொண்ட பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

வாழ்க்கையில் மோசமான ஆண்டு
1972 ஆம் ஆண்டு தனது வாழ்க்கையில் மோசமான ஆண்டு என தெரிவித்த அவர், தனது 30 ஆவது வயதில் மனைவி மற்றும் மகளை கார் விபத்தில் இழந்ததாகவும் அதன்பிறகு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் இரு மகன்களையும் தனி ஆளாக நின்று வளர்த்தாகவும் குறிப்பிட்டார்.

ஜோ பைடன் மனைவி மற்றும் மகளின் இறப்பினால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். அதன்படி அமெரிக்காவின் மிகவும் பிரபலமான டிலாவாரே பாலத்தின்மீது ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்துள்ளார். மது போதையில் பாலத்தின்மீது ஏறிய ஜோ பைடன் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள நினைத்திருக்கிறார்.

வீட்டில் இருக்கும் அவரது இரு மகன்களின் நினைவு வந்ததால்
ஆனால் வீட்டில் இருக்கும் அவரது இரு மகன்களின் நினைவு வந்ததால் தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

வாழ்க்கையில் எத்தனை சிரமங்கள் வந்தாலும் தற்கொலை எந்த ஒரு சிரமத்திற்கும் தீர்வாகாது என்றார்.

இன்னும் ஏழு மாதங்களில் அமெரிக்கா அதன் மிகப் பெரிய தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இதற்காக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய இரண்டு வேட்பாளர்களும் பலத்த பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.