;
Athirady Tamil News

முப்படைகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள்: மாநிலங்களவையில் தகவல்..!!

0

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு ராணுவ இணை மந்திரி அஜய்பட் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- முப்படைகளில், ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக ராணுவத்தில் மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 464 காலியிடங்கள் உள்ளன. விமானப்படையில் 5 ஆயிரத்து 723 காலியிடங்களும், கடற்படையில் 13 ஆயிரத்து 597 காலியிடங்களும் உள்ளன. முப்படைகளிலும் ஆண்டொன்றுக்கு மொத்தம் 71 ஆயிரம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக ஆள்தேர்வு நடக்கவில்லை என்று கூறுவது சரியல்ல என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.