;
Athirady Tamil News

ஜன.9-ல் வி.கே.சசிகலா சுற்றுப்பயணம்!!

0

செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த தொண்டர்களை சந்திக்கும் வகையில் ஜன. 9-ம் தேதி வி.கே.சசிகலாசுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சேவைகளை மக்களிடையே கொண்டுசேர்க்கும் வகையில் வி.கே.சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் வரும் 9-ம் தேதி பிற்பகல் கொளப்பாக்கத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கும் வி.கே.சசிகலா, மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோயில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் மற்றும் திருக்கழுகுன்றம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.