இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? நவ.8-ல் அறிவிப்பு! – அதிபர் ஹெர்சாக் தகவல்!
இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின் கூட்டணி 53 இடங்களை மட்டுமே வென்றது.
அவரது கூட்டணியில் இடம்பெற்று 7 இடங்களைக் கைப்பற்றிய யுனைடெட் தோரா ஜுடாயிஸம் எனும் கட்சி அவர் பிரதமராகத் தொடர ஆதரவு அளிக்க மறுத்துள்ளது. இதனால், அவர் பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.
நெதன்யாகுவை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களையும், முதல்முறையாக அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை இதுவரை எந்தவொரு கட்சியும் கைப்பற்றவில்லை. இதையடுத்து, அதிபர் ஹெர்சாக் உடனான சந்திப்பில் ஐசென்கோட் ஆட்சி அமைக்க அரபு கட்சிகளின் கூட்டணி ஆதரவளித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலின் புதிய பிரதமராகப் பதவியேற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 6) அறிவிக்கப்படும் என கட்சிகள் உடனான அலோசனைகளுக்குப் பிறகு அதிபர் ஹெர்சாக் இன்று தெரிவித்துள்ளார்.
Advertise with us
இதையடுத்து, தற்போது 67 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஐசென்கோட் அரபு கட்சிகளின் ஆதரவை ஏற்று புதிய அரசை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.