;
Athirady Tamil News

பசுமை எரிசக்தி தொடர்புடைய பட்ஜெட் பிரிவுகள் பிரகாசமான வருங்காலத்திற்கான அடிக்கல்- பிரதமர் மோடி!!

0

நடப்பு 2023- 24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு இணையதளம் வழியேயான கருத்தரங்க நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன. அதன்படி, 12 தொடராக நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பட்ஜெட்டில் இடம்பெற்ற 7 முக்கிய அம்சங்களில் ஒன்றான பசுமை எரிசக்தி வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் தனியார் துறையை எடுத்து கொள்ளும்போது, ஒரு தங்க சுரங்கம் அல்லது எண்ணெய் வயலுக்கு எந்த வகையிலும் இந்தியாவின் சூரிய சக்தி, காற்று மற்றும் எரிவாயு சக்தியானது குறைந்ததல்ல.

இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் ஆனது, அதிக அளவிலான பசுமை வேலைவாய்ப்புகளை பெரும் அளவில் உருவாக்க வல்லது. இந்தியாவில் பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கையானது, நாட்டின் பசுமை வளர்ச்சி செயல் திட்டத்தின் ஒரு முக்கிய பங்கு ஆகும். நாம் வருகிற நாட்களில் 3 லட்சம் பழைய, பழுதடைந்த வாகனங்களை அழிக்க இருக்கிறோம். இந்த பட்ஜெட்டானது இந்தியாவின் வருங்கால பாதுகாப்புக்கான ஒரு வாய்ப்பு ஆகும். பட்ஜெட் கொள்கைகளை நடைமுறைப்படுத்த கூட்டாக மற்றும் விரைவாக நாம் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த மத்திய பட்ஜெட்டானது, பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பரவி கிடக்கிற எண்ணற்ற திட்டங்கள் மற்றும் திட்ட தொடக்கங்களை வருங்காலத்தில் செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை கொண்டு உள்ளது. பசுமை எரிசக்தி தொடர்புடைய பட்ஜெட் பிரிவுகள், அடுத்த தலைமுறையின் பிரகாசமான வருங்காலத்திற்கான அடிக்கல்லுக்கான ஒரு வழியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.