;
Athirady Tamil News

நிபந்தையின்றி நிதி பெற்றிருக்கலாம்!!

0

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் உரிமையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து சுமார் 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் பெறும் வாய்ப்பு கிடைத்ததாகவும் 4 ஆண்டுகளில் பெறப்படும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கிடைக்கும் நிதிக்கு வட்டிகட்ட வேண்டும் என்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட மாசுபாட்டுக்கு கிடைக்கும் இழப்பீடு நாட்டுக்கு சொந்தமான பணம் என்பதால் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

கப்பல் விபத்து நடந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்துவிட்டாலும் எதுவும் செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இழப்பீட்டை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உழைக்கவில்லை என்றார்.

அதற்குப் பதிலாக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வந்துள்ள அரசாங்கம் மக்களை பலிகடா ஆக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய கப்பல் உரிமையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து சுமார் 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் பெறும் வாய்ப்பு கிடைத்ததாகவும் 4 ஆண்டுகளில் பெறப்படும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் வழக்குத் தொடுப்பதன் மூலம் அதிக டொலர்களை செலவிட நேரிடும் என்று குறிப்பிட்ட அவர், இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் வழக்கு தொடர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்கு சொந்தமான 6.4 பில்லியன் டொலர்களை தடுக்கும் வகையில் 250 மில்லியன் டொலர்கள் பிரித்தானிய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியுள்ளார் என்றும் நாடு வங்குரோத்து அடையும் சந்தர்ப்பத்திலும் தமது சட்டைப் பையை நிரப்பும் தாகம் தீரவில்லை என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.