;
Athirady Tamil News

ஏர் இந்தியா விமான விபத்து… கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு

0

விபத்தில் சிக்கிய ஏர் இந்திய விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பிரித்தானியப் பயணி ஜேமி ரே மீக் என்பவர் அகமதாபாத்திலிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த காணொளி தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.

விடைபெறுகிறேன்
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த காணொளியில் அவர் இந்தியாவிவில் இருந்து விடைபெறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் விமான நிலையத்தில் இருக்கிறோம், விமானத்தில் ஏறப் போகிறோம். விடைபெறுகிறேன் இந்தியா, 10 மணி நேர பயணத்தில் லண்டனுக்குத் திரும்ப இருக்கிறேன். இந்த நிலையில், தன் அருகில் அமர்ந்திருந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த ​​அவர்,

உங்கள் துணையுடன் பொறுமையை இழக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய முடிவு, மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியுடன் அமைதியாக லண்டன் திரும்புகிறேன் என அவர் பதிவு செய்துள்ளார்.

இந்திய நேரம் வியாழக்கிழமை பிற்பகல் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 53 பிரித்தானிய மக்களில் ஜேமி ரே மீக்கும் ஒருவர்.

போயிங் 787-8 விமானமானது அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கி 242 பேர்களுடன் புறப்பட்டது. அதில் 169 இந்திய குடிமக்கள், 53 பிரித்தானியப் பிரஜைகள், 7 போர்த்துகல் பிரஜைகள் மற்றும் 1 கனேடியர் என தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தரவுகளின் அடிப்படையில், விமானம் சுமார் 825 அடி உயரத்தை எட்டிய சிறிது நேரத்திலேயே உயரத்தை இழக்கத் தொடங்கியது மற்றும் இந்திய நேரப்படி பிற்பகல் 1.38 மணிக்கு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 40 வயதுடைய விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.