;
Athirady Tamil News

காது வலியால் துடித்த பெண்.. எண்டோஸ்கோபி செய்த டாக்டர்கள்.. கூடு கட்டி இருந்த சிலந்தி.. ஷாக்!!

0

சீனாவில் பெண்ணின் காதிற்குள் சிலந்தி கூடு கட்டி வசித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக காது வலியால் அவஸ்தை அடைந்த பெண் மருத்துவமனைக்கு சென்ற பிறகு டாக்டர்களின் எண்டோஸ்கோபி செய்த பிறகு தெரியவந்துள்ளது. சீனாவில் பெண் காதுவலி ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவர்கள் அவரது காதில் எண்டோஸ்கோபி செய்து பார்த்த போது, சிலந்தி பூச்சி அவரது காதுக்குள் கூடு கட்டியிருந்தது தெரியவந்துள்ளது. இதைப்பார்த்து மருத்துவர்களே ஒரு நொடி திகைத்து போயுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களாகவே கடுமையான காது வலியால் அவதிப்பட்டு இருக்கிறார். அதுபோக அவரது காதில் தொடர்ந்து ரீங்காரமும் கேட்டுக்கொண்டே இருந்து இருக்கிறது. காது வலி சரி ஆகிவிடும் என்று நினைத்த அவருக்கே மேலும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.

இதனால், வேறு வழியின்றி ஹுய்டாங் கவுண்டி மக்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்களிடம் தனக்கு சில நாட்களாகவே காதில் வலி இருந்து கொண்டே இருக்கும் தகவலையும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். மருத்துவர்களும் காதில் எண்டோஸ்கோபி செய்து காதிற்குள் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்று பார்க்கலாம் என அவரிடம் கூறியிருக்கின்றனர். அதன்படி, என்டோஸ்கோபி செய்து பார்க்கப்பட்டுள்ளது. அப்போதுதான் காதிற்குள் சிலந்தி கூடு ஒன்றை கட்டி குடும்பம் நடத்தி வந்துள்ளது. காதிற்குள் சிலந்திகள் இருப்பதை பார்த்த மருத்துவர்களும் ஒரு நொடி ஷாக் ஆகியிருக்கின்றனர். சிலந்தியின் வலையை வெளியே எடுக்க முயற்சித்த போது, சிலந்தி எண்டோஸ்கோபி கருவியை கடிக்க முயற்சித்து உள்ளது. ஒரு வழியாக மருத்துவர்களும் சிலந்தி வலையை காதில் இருந்து எடுத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “வலது காதில் வலி இருப்பதாக பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அவது காதில் கேமரா பொருத்தப்பட்ட என்டோஸ்கோபி கருவியை வைத்து பரிசோதனை செய்தோம். அப்போது செவிப்பறை போலவே சிலந்தி வலை தென்பட்டது. முதலில் எங்களுக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஆனால் உற்று பார்த்த போதுதான் காதிற்குள் ஏதோ அசைவது தெரியவந்தது. அதன்பிறகுதான் காதிற்குள் சிலந்தி வலை இருப்பது தெரியவந்தது. பிறகு லாவகமாக அதை வெளியில் எடுத்தோம். இந்த சிலந்தி பூச்சி விஷத்தன்மை அற்றது என்றும் பெண்ணின் காதில் சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது” என்று தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.