;
Athirady Tamil News

சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

0

சிறிலங்கா அதிபர் அலுவலகத்தில் பதவி வகிப்பதாகக் கூறி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மக்களை ஏமாற்றி பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலர் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான மோசடியாளர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அதிபர் ஊடகப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

தொலைபேசி ஊடாக
இவ்வாறான நபர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் அதிபரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத்வை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 071 – 530 8032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு, தகவல் வழங்குமாறும் அதிபர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.