;
Athirady Tamil News

கர்நாடகாவில் இழுபறி- இன்று பிற்பகல் டெல்லி புறப்படுகிறார் சித்தராமையா!!

0

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அம்மாநிலத்தில் முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

தற்போது வரை எல்லாமே சரியாக நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் ஆட்சியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார். இன்று பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்லும் சித்தயாமையாவின் இந்த பயணம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.