;
Athirady Tamil News

எம்.பிக்களுக்கான அநாவசிய வரப்பிரசாதங்களை நீக்கவும் !!

0

விமான நிலையத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரிசோதனையின்றி வருவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நீக்கப்பட வேண்டுமென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் குறித்த வரப்பிரசாத சலுகைகளைப் பயன்படுத்தி செய்தவற்றைக் கண்டிப்பதாகவும் அவரின் எம்.பி பதவியைப் பறிக்கும் பிரேரணை கொண்டு வரப்பட்டால் தான் அதற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவையற்ற சிறப்புரிமைகள் நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டு விருந்தினர்கள், பிரமுகர்கள் , ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு குறித்த சலுகைகள் வழங்கப்பட்டால் பரவாயில்லை எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.