;
Athirady Tamil News

வடக்கில் 29 நாட்களில் 16 பேர் உயிரிழப்பு ; நாளை எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானங்கள்!!

0

வடமாகாணத்தில் மே மாதத்தில் நேற்று 29ஆம் திகதி வரையிலான 29 நாட்களில் இடம்பெற்ற வீதி வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 10 பேரும் , கிளிநொச்சியில் 03 பேரும் மன்னார் , முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தலா ஒருவருமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் , யாழ்ப்பாணத்தில் அதிகாரிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நாளைய தினம் புதன்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயவுள்ளதாகவும் , அதன் போது , போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவற்றினை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.