;
Athirady Tamil News

சவுதி கட்டிடக் கலை நிபுணரை மணந்த ஜோர்டான் இளவரசர்!!

0

ஜோர்டான் நாட்டு இளவரசர், சவுதியின் கட்டிடக் கலை நிபுணர் ஒருவரை திருமணம் செய்துகொண்டது வளைகுடா நாடுகளில் பேசும் பொருளாகி உள்ளது.

ஜோர்டானின் இளவரசர் ஹூசைன் (28) – சவுதியின் கட்டிடக்கலை கலை நிபுணர் ராஜ்வா அல் சைஃப் (29) திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. தலைநகர் அம்மானில் நடைபெற்ற இந்தத் திருமணமத்தில் உலகப் பிரபலங்கள், அரசக் குடும்பங்கள் என பலரும் கலந்து கொண்டனர். இளவரசரின் திருமணத்தை முன்னிட்டு இன்று ஜோர்டானில் அரசு விடுமுறை விடுக்கப்பட்டு, அரசு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது.

இந்தத் திருமணம் ஜோர்டான் – சவுதி இடையே அரசியல் ரீதியிலான உறவை மேலும் மேம்படுத்தும் என்பதால் கூடுதல் கவனத்துடன் வளைகுடா நாடுகள் இந்த நிகழ்வை உற்று கவனிக்கின்றன.

திருமணம் முடித்த பின் இளவரசரையும், அவரது மனைவியையும் வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொடியசைத்து வரவேற்றனர்.

வறுமையும் கல்வியறிவின்மையும் நிரம்பி வழியும் நாடுகளில் ஒன்று ஜோர்டான். 1.1 கோடி மக்களை கொண்ட ஜோர்டானில் மன்னராட்சி முறை நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. மன்னராட்சி குறித்த விமர்சனங்கள் பரவலாக இருந்தாலும், பெரும்பான்மையான ஜோர்டான் மக்கள் மன்னராட்சி முறையை ஆதரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.