;
Athirady Tamil News

வேனுடன் லொறி மோதி கோர விபத்து; ஐவருக்கு நேர்ந்த கதி

0

இரத்தினபுரி, திரிவானகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக இரத்தினபுரி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இரத்தினபுரியிலிருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மொனராகலையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் இரத்தினபுரி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.