இறைச்சிக்கு விரைவில் நிவாரணம் !!
நாட்டில் பரவலாக கோழி முட்டைத் தட்டுப்பாடும் கோழி இறைச்சி விலையேற்றமும் தொடர்வதையடுத்து அது குறித்து அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்கும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கடுமையான விதிமுறைகளை அமுல்படுத்துவதன் மூலம் கோழி இறைச்சியின் விலை சடுதியாக உயர்வதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அடுத்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.