;
Athirady Tamil News

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் அதிரடியாக நீக்கம்!

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன பணி இடைநீக்கம் செய்ய்யப்பட்டுள்ளார்.

அவரது இடைநீக்கம் தொடர்பில் , சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடதத்தலைப்பின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்புதல் இன்றிப் ஊடகங்களுக்கு கருத்துகள்
அந்தக் கடிதத்தில், சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொறுப்புமிக்க பதவியில் உள்ள ஒரு அரசு வைத்திய அதிகாரியாக இருந்து கொண்டு, உரிய அனுமதி அல்லது ஒப்புதல் இன்றிப் ஊடகங்களுக்கு கருத்துகள் மற்றும் அறிக்கைகள் வழங்கியதாக வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கருத்துகள் மற்றும் ஊடகப் பேச்சுகள், நாட்டில் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை உருவாக்கியதாகவும், பொதுமக்களிடையே அமைதியின்மை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய மற்றும் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த பணி இடைநீக்கம் தொடர்பாக பதிலளித்துள்ள வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தன்னை ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதன் காரணமாகவே பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.