;
Athirady Tamil News

பாகிஸ்தான் அரசு விமான நிறுவனத்தை முழுமையாக விற்க முடிவு

0

நஷ்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸின் (பிஐஏ) 100 சதவீத பங்குகளையும் விற்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து தனியாா்மயமாக்கல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பிஐஏவை வாங்க விருப்பம் தெரிவித்த ஏலதாரா்கள் அனைவரும், ஒப்பந்தத்துக்குப் பிறகு அரசுக்கு எந்தப் பங்கும் இல்லாமல் முழு மேலாண்மை கட்டுப்பாடு வேண்டும் என்று கோரியதால், 100 சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்யப்பட்டது.

டிசம்பா் 23-ஆம் தேதி ஏலத்தில் முதலில் 75 சதவீத பங்குகள் விற்கப்படும். வெற்றி பெறும் ஏலதாரருக்கு ஒரு மாதத்துக்குள் மீதமுள்ள 25 சதவீத பங்குகளை 12 சதவீத கூடுதல் விலைக்கு வாங்கும் உரிமை வழங்கப்படும்.

இந்தக் கூடுதல் 12 சதவீத விலை, உடனடி பணம் செலுத்தாமல் ஒரு ஆண்டு தவணையில் செலுத்த அனுமதிப்பதற்காக வசூலிக்கப்படுகிறது.

ஏலத் தொகையில் 7.5 சதவீதம் மட்டுமே அரசுக்கு பணமாகக் கிடைக்கும். மீதமுள்ள 92.5 சதவீதம் நேரடியாக பிஐஏவில் மறு முதலீடு செய்யப்பட்டு, நிறுவனத்தை மீட்டெடுக்கப் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.