வவுனியாவில் வெள்ள நிவாரண கொடுப்பனவு; பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி
வவுனியாவில் பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட பிரபல ரவுடி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
கடந்த கிழமை வவுனியாவில் கிராம அலுவலர் ஒருவரை வெள்ள நிவாரண கொடுப்பனவு தொடர்பில் தாக்குதல் மேற்கொள்ள முயன்று கடமைக்கு இடையூறை விளைவித்தார் என்று நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
கைதானவர் வவுனியாவில் பிரபல ரவுடி என்றும் வவுனியா பொலீசார் அவரை கைது செய்யாமல் விட்டபோது கிராம அலுவலர் சங்கங்கள் தலையிட்டு குறித்த நபரை கைது செய்துள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.