;
Athirady Tamil News

ஆசிய கோப்பை ஹாக்கி- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து !!

0

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது’குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “2023 மகளிர் ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற எங்கள் இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள். இந்திய பெண்கள் அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் நம் தேசத்தை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர். தங்களின் முன்னோக்கிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.