;
Athirady Tamil News

யாழில் மீன் வாங்கச் செல்பவர்கள் மிகுந்த அவதானம் ; திடீர் சோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

0

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து நேற்று திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தவிசாளர், உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பழுதடைந்த மீன்கள்
இதன்போது, நான்கு வியாபாரிகளிடமிருந்து சுமார் 30 கிலோகிராம் வரையான பழுதடைந்த மீன்கள் மற்றும் இறால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட மீன்கள் மற்றும் இறால்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சோதனை நடவடிக்கை மூலம் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.