;
Athirady Tamil News

சாதித்த உக்ரைன் விமானப்படை வீரர்கள் -கலக்கத்தில் ரஷ்யபடை !!

0

அமெரிக்காவின் F-16 ரக போர் விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சியை உக்ரைன் விமானப்படை வீரர்கள் நான்கு மாதங்களில் நிறைவு செய்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் Oleksii Reznikov தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் Oleksii Reznikov இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்த பயிற்சியை நிறைவு செய்ய 6 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், உக்ரைன் வீரர்கள் நான்கே மாதத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதைப்போல பிரான்ஸின் சீசர் அமைப்புகளை பயிற்சி செய்ய மூன்று மாதங்கள் தேவைப்படும் என்ற நிலையில் உக்ரைனிய வீரர்கள் மூன்று வாரங்களில் பயிற்சியை நிறைவு செய்து உள்ளனர்.

வான் பாதுகாப்பு பேட்ரியாட் அமைப்புகளை பயிற்சி பெற 10 மாதங்கள் இருக்கும் நிலையில் 10 வாரங்களில் உக்ரைன் வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர் என அமைச்சர் Oleksii Reznikov உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்காவின் முதல் F-16 ரக போர் விமானங்களை 2024ம் ஆண்டு உக்ரைன் வான் பரப்பில் பார்க்க முடியும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.