;
Athirady Tamil News

சுற்றுலாத்துறையை மேம்படுத்த USAID, SLTDA அறிமுகப்படுத்தும் திட்டம்!!

0

கொழும்பு இலங்கை ; சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனமும் (USAID) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் (SLTDA) இணைந்து சுற்றுலாத்துறையில் பல முக்கிய புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையில் வீழச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறைக்கு புத்துயிரளித்துள்ளன. சாகச சுற்றுலாப்பயணம் முதல் கலாசார அனுபவங்கள் ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்தும் சிகிச்சைகள் என்பன வரையாக உள்ளடங்கியிருக்கும் இப்பிரிவுகள் இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கு கூடுதல் அனுகூலங்களை வழங்குவதோடு அதிகளவிலான சர்வதேச ரீதியான உல்லாசப் பயணிகளையும் கவரும்

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான உல்லாசப் பயணிகளின் வருகையானது முதல் காலாண்டில் 30 வீதம் அதிகரித்தது எனினும் இந்த பிரிவு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. புதிய மூலோபாயத்தின் வெற்றிகரமான அமுலாக்கமானது

இலங்கை தனது வர்த்தக நாமத்தை சிறப்பாக நிலைநிறுத்துவதற்கும் இலங்கையை நோக்கி உல்லாசப் பயணிகளைக் கவர்தல் மற்றும் சந்தைப் பங்கை அதிகரிப்பதற்கும் சுற்றுலாத் துறை முழுவதும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மற்றும் அவசியமாகத் தேவைப்படும் அந்நிய செலாவணியை உருவாக்குவதற்கும் அனுமதிக்கும்.

இந்த மூலோபாயத்தின் ஆரம்பமானது USAID இன் இந்தோ-பசுபிக் வாய்ப்பளிக்கும் திட்டத்தின் ((IPOP),) ஒரு வலுவான முன்னோடியாகும். மேலும் இது SLTDA க்கு முக்கிய சுற்றுலா வணிகங்களை முறைப்படியாக செயற்படுத்தவும் முன்னோக்கிச் செல்லும் முயற்சிகளை வரையறுக்கவும் உதவும். கொவிட் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து மீண்டு தற்போது பொருளாதார நெருக்கடியைக் கையாள சுற்றுலா இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமானது. தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தில் சுற்றுலா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாக இருந்தது. 2018 இல் 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை அது ஈட்டியது ஏற்கனவே அதன் இயற்கை அழகு மற்றும் கலாசார பாரம்பரியத்திற்காக ஒரு சுற்றுலாத் தலமாக பிரபலமடைந்துள்ள இலங்கை விடுமுறை அனுபவத்தில் மூழ்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவங்களை வழங்குவதன் மூலம் புதிய உத்தியிலிருந்து பயனடையும்.

இலங்கையில் இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது” என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான USAID பணிப்பாளர் Gabriel Grau ஜூன் மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்தார்.

பாணந்துறையில் உள்ள பார்ன்ஹவுஸில். நடைபெற்ற இந்நிகழ்வில் Gabriel Grau மேலும் கூறுகையில் “கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல வருடங்களாக பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து உலகளாவிய சுற்றுலாத் தலமாக அதன் முழு திறனையும் உணர இலங்கை மீண்டும் தயாராக உள்ளது என்பதை இது காட்டுகிறது. புதிய நிலையான சுற்றுலா மூலோபாயம், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உதவுவதோடு, இலங்கையின் சுற்றுலாத் துறை மீண்டும் பாதையில் செல்லவும், நாட்டின் பொருளாதார மீட்சியை மேம்படுத்தவும் உதவும். இந்த முக்கியமான துறையில் USAID ஈடுபட்டுள்ளது இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை திரும்புவதற்கு நாங்கள் ஆதரவளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 75 வருடங்களாக அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில் இது ஒரு வலுவான கூட்டாண்மையாகத் தோற்றமளிக்கிறது” என்றார்.

“இலங்கையில் ஒரு புதிய நிலையான சுற்றுலா மூலோபாயத்தை நாங்கள் ஆரம்பிப்பதால் இன்று இலங்கையின் சுற்றுலாவுக்கு ஒரு சிறப்பான நாள். இந்த முக்கிய தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தவும் ஆதரிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் இலங்கையின் சுற்றுலா ரீதியான சலுகைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு புதிய முன்னுதாரணத்தை இது குறிக்கிறது. அதிக வருமானம் தரும் அனுபவத்தால் உந்தப்பட்ட இடமாக இருப்பதற்கான திறனை முழுமையாகப் பயன்படுத்த இலங்கைக்கு உதவும் ”என்று SLTDA இன் துணை பணிப்பாளர் நாயகம் உபாலி ரத்நாயக்க கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.