;
Athirady Tamil News

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் மிகப்பெரிய ஊடுருவல் முறியடிப்பு: இந்திய ராணுவம்!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக அவ்வப்போது பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் உடுருவும் சம்பவம் நடைபெறுவது உண்டு. ஆனால், இந்திய வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ஊடுருவலை முறியடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பூஞ்ச் செக்டார் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாட்டம் இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி, இந்திய ராணுவம் ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு சிறிய ஊடுருவல் தடுக்கப்பட்டதாகவும், ஒரு பெரிய ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு உதவியதாக மூன்று ஊழியர்களை ஜம்மு-காஷ்மீர் அரசு வேலையில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.