;
Athirady Tamil News

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஏனைய கொடுப்பனவுகள் குறித்தும் அமைச்சரின் சாதகமான அறிவிப்பு

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வளத் துறை அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலையில் எமது ஒட்டுமொத்த அரச சேவையையும் வலுப்படுத்த வேண்டியதே எமது நிலைப்பாடாகும்.

அதிகரிக்கும் சம்பளம்
எமது அரச சேவை தற்போது பலவீனமான நிலையில் உள்ளது. தேவையான ஊழியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. பல பதவி வெற்றிடங்கள் இங்கு உள்ளன.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். படிப்படியாக அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பி, அரச சேவைக்குத் தேவையான பணியாளர்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்வோம்.

அது மட்டுமன்றி, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம். அத்தோடு, ஏனைய வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளையும் எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ஏன் என்றால், அரச சேவையை வலுப்படுத்தாமல் எமது நாட்டின் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது.

அரசாங்கமும், அரச சேவையும், மக்களும் ஒன்றிணைந்து வலுவாகச் செயற்பட்டால் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். கடந்த காலங்களில் அரச சேவை பலவீனப்படுத்தப்பட்டது. தற்போது அதனை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.