;
Athirady Tamil News

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை ; கடற்றொழிலாளர்கள் அவதானம்

0

தெற்கு அந்தமான் கடலுக்கு அருகிலும், வட சுமாத்ரா தீவுகளைச் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் இன்று (29) முதல் குறைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், எதிர்வரும் மணித்தியாலங்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வானிலை எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்படக்கூடிய கடற்பகுதிகளில் பயணங்களை மேற்கொள்வோர் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.