;
Athirady Tamil News

அதிகரிக்கும் புவி வெப்பநிலை – ஐ. நாவின் புதிய தகவல் !!

0

உலக வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் நிறுவனமான உலக வானிலை அமைப்பு தகவலொன்றினை வெளியிட்டுள்ளது.

அவ்வகையில், 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமி தற்போது வெப்பநிலையில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மனித செயல்பாடுகள் காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும், இதில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.

இவ்வாய்விற்காக, பணிக்கட்டிகள், மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்பநிலை உள்ளிட்டவை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக சீனாவில் ஒருமுறை 52.2 டிகிரி செல்சியஸ் அதாவது 126 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும், கனடாவில் காட்டுத் தீ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது பனிப்பாறைகள் மேலும் உருகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் வெப்பக் காற்றை உணர முடிவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.