;
Athirady Tamil News

ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் கொள்ளை- கொள்ளையனை பிடிக்க 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைப்பு!!

0

ஈரோடு குமலன்குட்டை கணபதி நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (74). ஆடிட்டர். இவரது மனைவி சுப்புலட்சுமி (68). ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி. பல் மருத்துவர். ஆஸ்திரேலியாவில் கணவருடன் வசித்து வருகிறார். இதனால் துரைசாமியும், சுப்புலட்சுமி ஈரோட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் துரைசாமி நேற்று ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது அலுவலகத்திற்கு வழக்கம்போல் சென்று விட்டார். வீட்டில் இருந்த சுப்புலட்சுமி ஈரோடு நாடார்மேட்டில் இவர்களுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் கட்டிட பணிகளை மேற்பார்வையிடுவதற்காக புறப்பட்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து துரைசாமியும், சுப்புலட்சுமியும் மதியம் சாப்பாட்டிற்காக சுமார் மதியம் 2.30 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். எப்போதும் போல வீட்டின் பூட்டினை திறந்து உள்ளே நுழைந்தனர். அப்போது வீட்டிற்குள் உள் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டும் அதில் இருந்து பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பீரோவை சோதனை செய்தபோது பீரோவில் இருந்த 150 பவுன் நகை திருட்டு போய் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து துரைசாமி வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது சமையல் அறையின் பின்புறம் உள்ள கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. மர்மநபர் வீட்டிற்குள் நுழைந்து 150 பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்றதை உறுதி செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார் துரைசாமியின் வீட்டிற்கு வந்தனர். மேலும் ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ராஜபிரபு, மோகனசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்த நாய் வீரா சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் சுவர், கதவு, இருக்கைகள் உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த மர்மநபரின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

https://www.maalaimalar.com/news/state/a-separate-team-of-3-inspectors-uses-cctv-to-catch-a-thief-who-looted-150-sovereigns-from-the-auditors-house-646361

You might also like

Leave A Reply

Your email address will not be published.