;
Athirady Tamil News

பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!!

0

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் பெற (Document Attestation) விண்ணப்பித்த பரீட்சை சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு இன்று (07) முதல் ஆன்லைனில் வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, இனிமேல் வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று சான்றிதழ்களைப் பெற வேண்டிய அவசியமில்லை எனவும், 2001ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு இந்த முறை பொருந்தும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழின் நகலுக்கு பதிலாக, வெளியுறவு அமைச்சகத்தால் சான்றளிக்கப்பட்ட பரீட்சை சான்றிதழின் டிஜிட்டல் நகல் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்றும் விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்திகள் மூலம் இந்த செயல்முறை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி தரப்பினருக்கு இந்த சான்றிதழை ஆன்லைனில் சரிபார்க்க முடியும் என்றும், அதற்கு, certificate.doenets.lk இன் கீழ் வழங்கப்பட்ட ஆன்லைன் சான்றிதழில் அந்த வசதியை வழங்க முடியும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவையாயின் 1911, 0112788137, 0112784323 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.