;
Athirady Tamil News

டிரம்பின் மகனுக்கு வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம்

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனுக்கு வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

டிரம்ப் இன் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.

திருமண நிச்சயதார்த்தம்
டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளநிலையில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக 2018 ஆம் ஆண்டு அறிவித்தனர்.

அத்துடன் இவர்களின் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது. டொனால்ட் டிரம்ப் ஜூனியர் – பெட்டினா ஆண்டர்சன் என்ற பெண்ணை கடந்தாண்டு முதல் காதலித்து வந்தார்.

இந்நிலையில், இருவருக்கும் வெள்ளை மாளிகையில் திருமண நிச்சதார்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.