;
Athirady Tamil News

பச்சையை வைத்து மனைவியென கண்ட கணவன்!!

0

தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலையுச்சியில் படுகொலைச் செய்யப்பட்டு கைவிடப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை அப்பெண்ணின் சட்டரீதியான கணவன் அடையாளம் காட்டியுள்ளார். அதன்பின்னர், நீதவானின் பணிப்புரைக்கு அமைய அச்சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம், லிந்துலை பொலிஸாரினால், ஓகஸ்ட் 1ஆம் திகதி மீட்கப்பட்டது. 21 நாட்களுக்குப் பின்னர் சடலம், சட்டரீதியான கணவனால் அடையாளம் காட்டப்பட்டது. அதன்பின்னர், நுவரெலியா நீதவானின் கட்டளைக்கு அமைய, உறவினர்களிடம் சடலம் செவ்வாய்க்கிழமை (22) கையளிக்கப்பட்டது.

மரணமடைந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக, அப்பெண்ணின் கைவிரல்களின் அடையாளம் பெறப்பட்டு, அந்த அடையாளங்கள், கைவிரல் அடையாள பொலிஸ் பிரிவு மற்றும் கைவிரல் அடையாளர் பதிவாளர் காரியாலயம் ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே இறந்த பெண்ணின் உறவினர்களை கண்டறிய முடிந்தது என லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர குமார தெரிவித்தார்.

தங்கல்ல கிரிந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஜூனைட் கிஷாணி (வயது 36) என்ற பெண்ணின் சடல​மே அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்து இருந்த இந்த பெண், சட்டரீதியான கணவனிடம் இருந்து பிரிந்து, வேறு ஒரு நபருடன் தொடர்பை பேணியிருந்தார். மரணமடைந்த பெண்ணுக்கும் சட்டரீதியாக திருமணம் முடிந்திருந்த நபருக்கும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

மரணமடைந்த பெண்ணின் வலது கையில் மதுசங்க என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது. அதனை வைத்தே, அச்சடலம் தன்னுடைய மனைவியுடையது என்பதை கணவன் இனங்கண்டுள்ளார்.

இதேவேளை மரணமடைந்த பெண்ணுடன் கிரேட்வெஸ்டன் மலையுச்சிக்கு வந்த நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.